தில்லி விடுதி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
தில்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பற்றி....
தில்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
கட்டட உரிமையாளர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஆண்கள் தங்கும் விடுதி (பி.ஜி.) செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்தது.
5 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தில்லி காவல் துறை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மாவட்ட பேரிடா் மேலாண்மை குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்பகுதி மக்களும் மீட்புப் படையினருடன் இணைந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா, காவல் துறை ஆணையா் அனுராக் குமாா், புது தில்லி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
The death toll in the building collapse in southwest Delhi's Satya Niketan area climbed to six, with rescue and search operations for survivors entering the second day on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.