மேகாலயா யுடிபி கட்சியின் 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவு!
மேகாலயாவில் ஐக்கிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பற்றி..
மேகாலயாவின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியை (யுடிபி) சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.க்கள், மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முன்னிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தனர்.
லாக்மென் ரிம்பூய், பியஸ் மார்வெயின், கிர்மென் ஷில்லா, மேரல்போர்ன் சியம், மேத்யூ குர்பா, ஓலன் சிங் சுயின், பாலஜீத் குபார் சின்ரெம் மற்றும் சின்ஷார் குபார் ராய் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூத்த பாஜக தலைவர் கிரன் ரிஜிஜு கூறுகையில்,
Advertisement
Advertisement
யுடிபி எம்.எல்.ஏ.க்களைக் கட்சியில் வரவேற்ற ரிஜிஜு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்கு பிராந்தியமும் மேகாலயாவும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறினார்.
இது வடகிழக்கு பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிக முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வாகும்.
இந்த எட்டு எம்.எல்.ஏ.க்களும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அதனால் அவர்கள் பாஜகவில் இணைய முடிவு செய்தனர்.
வடகிழக்கு மாநிலங்களுக்கான பாஜக ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் எம்.பி.யுமான சம்பித் பத்ரா, பாஜகவில் இணைந்த எட்டு யுடிபி எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை அறிவித்தார். நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.