FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

50 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை! ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 8 ஆண்டு சாதனை!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி...

23 செப்டம்பர் 2026, 2:15 pm IST
ஆயுஷ்மான் பாரத் - X
பகிர்:

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆராக்கிய யோஜனா கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 23ல் தொடங்கப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான பணமில்லா சிகிச்சை வசதியை வழங்குகின்றது. இது விரிவான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும் நிதிப் பாதுகாப்பு அம்சமாகும்.

இத்திட்டத்தில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (விரிவான ஆரம்பச் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை), அத்துடன் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,

நரேந்திர மோடி அரசின் முக்கிய நலத்திட்ட நடவடிக்கை இதுவாகும். இந்த நலத்திட்டம் தொடங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளில், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ரூ. 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 13 கோடிக்கும் அதிகமான மருத்துவமனைச் சேர்க்கைகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதான் மக்கள் நலன். இது பிரதமர் நரேந்திர மோடியின் தாக்கம் என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்கள் களத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இது காட்டுவதாகவும் தெரிவித்தார்.

முந்தைய காங்கிரஸ் அரசுகளின் சுகாதாரக் கட்டமைப்புடன் இத்திட்டத்தை ஒப்பிட்ட அவர், முன்பு மக்கள் தங்கள் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டியிருந்ததையும், ஆயுஷ்மான் அட்டைகள் அவர்களுக்குக் கிடைக்காத நிலையையும் சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments