FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமணத்துக்கு 12 மணிநேரம் பரோல்! பலத்த பாதுகாப்புடன் வெளிவந்த ஹரியாணா ரெளடி!

திருமணத்துக்கு 12 மணிநேரம் பரோலில் ஹரியாணா ரெளடி வெளிவந்தது பற்றி...

24 செப்டம்பர் 2026, 11:18 am IST
பரோலில் வெளிவந்த ஹரியாணா ரெளடி - x | ANI
பகிர்:

ஹரியாணாவைச் சேர்ந்த ரெளடி மைன்பால் தில்லா, தனது கம்போடியா காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக 12 மணிநேர பரோலில் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல் உள்பட 22 குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஹரியாணா ரெளடி மைன்பால் தில்லா.

இவர் 2014 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2018-ல் ஆறு வாரங்கள் பரோலில் வெளிவந்தார். அப்போது பரோல் முடிந்து மீண்டும் சிறைச்சாலையில் சரணடையாமல், கம்போடியாவுக்குத் தப்பிச் சென்றார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, மைன்பால் தில்லாவை தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக ஹரியாணா போலீஸ் அறிவித்த நிலையில், 2024-ல் அவருக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கம்போடியா அதிகாரிகளால் ஜூலை 2025-ல் கைது செய்யப்பட்ட மைன்பால், இந்தியாவுக்கு செப். 2025-ல் நாடுகடத்தப்பட்டார்.

தற்போது ஹரியாணாவில் உள்ள ஹிசார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மைன்பாலுக்கு காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக 12 மணிநேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ஜஜ்ஜார் மாவட்டத்தில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு சிறையிலிருந்து சாலை வழியாக மைன்பால் அழைத்துச் செல்லப்பட்டார்.

கம்போடியாவைச் சேர்ந்த மைன்பாலின் காதலி மெட்டா சானை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். மெட்டா சானுக்கு 4 குழந்தைகள் உள்ளன.

பரோல் முடிந்து இன்று இரவு 8 மணிக்குள் மைன்பாலை சிறையில் மீண்டும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மைன்பாலின் திருமணம் நடைபெறும் பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய சிறப்புப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

12-hour parole for wedding! Haryana gangster released under heavy security!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments