FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருத்துவத் துறையில் அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் மேற்கு வங்கம்!

நியூ டவுனில் அதிநவீன மருத்துவமனை பற்றி...

24 செப்டம்பர் 2026, 3:05 pm IST
அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் மேற்கு வங்கம் - X
பகிர்:

மேற்கு வங்கத்தில் தொழில் துறை, சுகாதாரத் துறைகளை மறுசீரமைத்து மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு அதானி குழுமத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள நியூ டவுன் பகுதியில் அதானி குழுமத்தால் கட்டப்படவுள்ள 2,000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கான அடிக்கல்லை, முதல்வரும், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியும் இணைந்து நாட்டினர்.

கடந்த மே மாதம் பதவியேற்ற பிறகு, மாநிலத்தில்முதலீடு செய்யுமாறு அதானியிடம் தான் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சில மாதங்களிலேயே அதானி குழுமம் இந்தச் சுகாதாரத் திட்டத்தை அறிவித்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

அதேபோன்று, மாநிலத்தின் தொழில்துறையை மீட்டெடுக்க உதவுமாறு அதானியிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.

நியூ டவுன் பகுதியில் நவீன சுகாதார வசதி ஒன்றை அமைப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக கௌதம் அதானியிடம் கூறியிருந்தேன். இதனிடையே சில மாதங்களிலேயே, இத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கை வசதிகளில் பாதியை, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்காக இலவசமாக ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இது ஒரு சிறப்பு மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாகவும் திகழும். இது எதிர்கால மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், கிழக்கு, வடகிழக்கு பிராந்தியங்கள் பயனடையவும் உதவும் என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கான தங்கும் வசதிகள், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் ஆகியவற்றுடன் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளையும் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சுகாதார நகரமாக இந்த வளாகம் காலப்போக்கில் வளர்ச்சியடையும் என்று அதிகாரி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மருத்துவச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் இந்த வசதி அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

மருத்துவமனைத் திட்டத்தைத் தாண்டி, பாரம்பரியமிக்க 'ரைட்டர்ஸ் பில்டிங்ஸ்' கட்டடத்தைப் புதுப்பிப்பதிலும், மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜையுடனான தொடர்பிலும் அதானி குழுமம் மேற்கு வங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments