FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!

தனியார் விமானத்தில் பறக்கும் கேரள முதல்வர், அது அரசு செலவு அல்ல, தனிநபர் எனக்காக செலவிடுவதாக விளக்கம் கொடுத்திருப்பது பற்றி..

24 செப்டம்பர் 2026, 2:02 pm IST
கேரள முதல்வர் வி.டி. சதீசன் - பிடிஐ
பகிர்:

கேரள முதல்வர் வி.டி. சதீஸன், மேற்கொள்ளும் தனியார் விமானப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கும் நிலையில், அது அரசு செலவில் செய்யப்படுவதில்லை, தனிநபர் தனக்காக செலவிடுகிறார் என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்துக்குள் தொடர்ச்சியாக பல பயணங்களை தனியார் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று வந்தது குறித்து அவ்வப்போது கடும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அண்மையில் மேற்கொண்ட பயணம் பேசுபொருளானது.

இந்த வாரம், கேரள முதல்வர் சதீஸன் தனியார் விமானம் மூலம் மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த நிலம்பூர் பகுதிக்கு சென்று, அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான ஆறு பேரின் குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

Advertisement

Advertisement

வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்வர், தனியார் விமானத்தில் செல்வதா? என்று கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக கொந்தளித்து விட்டனர். யார் இந்த செலவுகளை மேற்கொள்வது என்று வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு பதிலளித்த கேரள முதல்வர் சதீஸன், பேரிடர் மேலாண்மைப் பொறுப்பு என்னுடையது, தனி நபர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டரில் நான் மலப்புரம் சென்றிருந்தேன். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர்; இந்த ஏற்பாட்டில் என்ன தவறு இருக்கிறது? அவருடைய பெயரை வெளிப்படுத்தி, அவரை ஏன் சர்ச்சைக்குள் இழுக்க வேண்டும்? அவர் அரசிடமிருந்து எந்தச் சலுகையையும் கோரப்போவதில்லை; நாங்களும் அவருக்கு எந்தச் சலுகையையும் அளிக்கப்போவதில்லை. மாநில அரசுக்கு இதனால் எந்தச் செலவும் ஏற்படவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால், இந்த பதிலால் எதிர்க்கட்சிகள் திருப்தியடையப் போவதில்லை. அந்த தனிநபரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

ஏற்கனவே, கேரள முதல்வரின் பல பயணங்கள் பேசுபொருளாகியிருந்தது. அப்போதெல்லாம் பதிலளிக்காத சதீஸன் தற்போது தனிநபர்தான் செலவிடுகிறார் என்று சொல்லியிருக்கிறார்.

முந்தைய கேரள அரசு, மாத வாடகையாக ரூ.80 லட்சம் செலுத்தி, 24 மணி நேரப் பயணத்துக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் நிறைவு பெற்று, அடுத்த வாடகை ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது, தனியார் விமானப் பயணத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் சதீஸன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments