FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிக்கிம்: கனமழையால் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது குறித்து...

50 வினாடிகள் முன்பு
சிக்கிம் கனமழையால் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - PTI
பகிர்:

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசுக் குடியிருப்புகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.

சிக்கிம் மாநிலம் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள ரிம்பி கிராமத்தில் வியாழக்கிழமை (செப். 24) இரவில் இடைவிடாது கனமழை பெய்தது. இந்தத் தொடர் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, பெருமளவிலான மண், பாறைகள், இடிபாடுகள் கீழ்நோக்கி சரிவில் பாய்ந்தன.

நிலச்சரிவு ஏற்பட்டு சரிந்ததில் அரசுக் குடியிருப்புகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும், அதிருஷ்டவசமாக இந்த நிலச்சரிவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

மேலும், கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து சுமார் 130 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ரிம்பியில் நிலச்சரிவு சம்பவம் குறித்து கவலை தெரிவித்த சிக்கிம் முதல்வர் பிரேம் சிங், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பும் நலனுமே அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் எனக் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனமழைக்கு மத்தியிலும் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறும் வலியுறுத்திப் பேசிய முதல்வர் பிரேம் சிங், சூழ்நிலையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

summary

Heavy Rainfall triggers major landslide in Sikkim's Rimbi, several houses damaged

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments