FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓணம் பம்பர் லாட்டரி! முதல் பரிசு ரூ.30 கோடியில் கையில் கிடைப்பது எவ்வளவு?

ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடியில் கையில் கிடைப்பது எவ்வளவு? என்பது பற்றி..

53 வினாடிகள் முன்பு
பண நோட்டுகள் - dps
பகிர்:

கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று முடிவுகள் வெளியாகும் நிலையில், முதல் பரிசான ரூ.30 கோடியில் கையில் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.

ஓணம் லாட்டரி குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், முதல் பரிசு பெறுபவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 கோடியும் வழங்கப்படாது என்ற தகவலும், ஏஜென்ஸி கமிஷன் கழிக்கப்பட்டு, அந்தத் தொகைக்கு வருமான வரியும் பிடித்தம் செய்யப்படுமாம்.

இந்த லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு குலுக்கல் முறையில் பரிசு விழும். ஒட்டுமொத்தமாக பரிசுத் தொகை மட்டும் ரூ.125.55 கோடியாம். இதில் கமிஷன் தொகை ரு.12.55 கோடியும் கேரள மாநில அரசின் கருவூலத்துக்கு செல்லும் தொகை ரூ.241.20 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் திரட்டப்பட்ட ஜிஎஸ்டி ரூ.128.52 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கேரளத்தில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேரளத்தின் மிகப்பெரிய லாட்டரி பரிசான ரூ.30 கோடியை வெல்லப்போவது யார்? அதிர்ஷ்ட எண்ணை வாங்கியவர் யார் என்பதெல்லாம் விரைவில் தெரிய வரும்.

இந்த ஆண்டு சுமார் 90 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், முதல் பரிசு ரூ.30 கோடி. ஒரு டிக்கெட் விலை ரூ.500 என்பதால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்திருக்கும் வருவாய் மட்டும் ரூ.450 கோடி. அதாவது ஒரு ரூ.500 லாட்டரி டிக்கெட்டில் ரூ.268 கேரள அரசுக்கு வந்துவிடுமாம்.

முதல் பரிசு பெறுபவருக்கு கையில் கிடைக்கும் தொகை எவ்வளவு?

முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.30 கோடியில், ஏஜென்ஸி கமிஷன் தொகை 10 சதவிகிதம் அதாவது ரூ.3 கோடி கழிக்கப்படும்.

பிறகு, ரூ.27 கோடியில், இந்தத் தொகைக்கு வருமான வரியும் பிடித்தம் செய்யப்படுமாம். அதாவது ரூ.8.10 கோடி வரி பிடித்தம் மற்றும் 25% இதர கட்டணங்கள் என ரூ.2 கோடி பிடித்தம் செய்யப்படும்.

27 கோடியில் 10.125 கோடி பிடித்தம் போன தொகைக்கு 4 சதவிகித செஸ் வரியாக ரூ.40.50 லட்சம் கழிக்கப்படுமாம்.

இந்த பிடித்தங்கள் எல்லாம் போக, ரூ.30 கோடி பரிசு பெற்றவரின் கையில் ரூ.16.47 கோடி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Onam Bumper Lottery! How much of the ₹30 crore first prize do you actually get in hand?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments