கேரள ஓணம் பம்பர் லாட்டரி! ரூ.30 கோடி முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்!
கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடி வென்ற டிக்கெட் எண் குறித்து...
கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடி TL 360615 என்ற டிக்கெட் எண்ணுக்குக் கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, அதன் குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தக் குலுக்கலில் TL 360615 டிக்கெட்டுக்கு ரூ. 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இரண்டாம் பரிசு மொத்தம் 20 பேருக்கு வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு கிடைத்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி வழங்கப்படும். அந்த வகையில், TA 300530, TA 957486, TB 439962, TB 642974, TC 810428, TC 952340, TD 279706, TD 305900, TE 328611, TE 970611, TG 355002, TG 805847, TH 192282, TH 902375, TJ 150990, TJ 978616, TK 375661, TK 976006, TL 792519, TL 888018 ஆகிய 20 டிக்கெட் எண்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருப்பவர்களில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
The first prize of ₹30 crore in the Kerala Onam Bumper Lottery has been won by ticket number TL 360615.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.