FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து...

27 செப்டம்பர் 2026, 12:12 pm IST
லாட்டரி டிக்கெட். - கோப்புப் படம்
பகிர்:

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 30 கோடி முதல் பரிசு வென்ற டிக்கெட்டை கண்ணூரில் உள்ள முத்து ஏஜென்சி விற்பனை செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, அதன் குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், அதன் முடிவுகள் நேற்று (செப். 27) வெளியாகின.

இந்தக் குலுக்கலானது திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் அமைச்சர் கே.முரளிதரன் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

Advertisement

Advertisement

சுமார் 5 லட்சத்துக்கும் மேலானோர் பரிசு பெறவுள்ள இந்த பம்பர் லாட்டரியில் ரூ. 30 கோடிக்கான முதல் பரிசை TL 360615 என்ற எண் வென்றது.

முதல் பரிசை வென்ற இந்த டிக்கெட்டானது கண்ணூரில் உள்ள முத்து ஏஜென்சியின் மூலம் விற்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்த டிக்கெட்டை வாங்கிய நபர் யார் என்பது இப்போது வரை தெரியவில்லை.

இருப்பினும், கேரள லாட்டரியில் பரிசு வென்ற நபர், குலுக்கல் நடைபெற்ற 30 நாள்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் பரிசை உரிமை கோர வேண்டும் என்பதால் அந்த அதிர்ஷ்டசாலி விரைவில் யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Muthu Agency in Kannur sold the ticket that won the first prize of ₹30 crore in the Kerala Onam Bumper Lottery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments