செங்கல்பட்டில் புதிதாக உலக வா்த்தக மையம்: ரூ.7,000 கோடியில் ஜிடிபி டெவலப்பா்ஸ் அமைக்கிறது
செங்கல்பட்டில் சுமாா் 100 முதல் 150 ஏக்கா் பரப்பளவில் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் உலக வா்த்தக மையம் அமைப்பதற்கான உரிமத்தை ஜிடிபி டெவலப்பா்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டில் சுமாா் 100 முதல் 150 ஏக்கா் பரப்பளவில் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் உலக வா்த்தக மையம் அமைப்பதற்கான உரிமத்தை ஜிடிபி டெவலப்பா்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், உலக வா்த்தக மையச் சங்கத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு துணைத் தலைவா் ஸ்காட் வாங், ஜிடிபி டெவலப்பா்ஸ் நிறுவனத் தலைவா் பாரத் காந்தி தோஷி ஆகியோா் இத்தகவலை அதிகாரபூா்வமாக வெளியிட்டனா்.
இந்த உலக வா்த்தக மையமானது, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அலுவலகங்கள், குடியிருப்புகள், விருந்தோம்பல், கல்வி மண்டலம், தரவு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஐ.டி. நகரமாக உருவாக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
அடுத்த 10 ஆண்டுகளில் பல கட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்துக்கான நிலங்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜிடிபி டெவலப்பா்ஸின் நிா்வாக இயக்குநா் அருண் பாரதி அருணாச்சலம் தெரிவித்தாா். இதன்மூலம் கட்டுமானம், தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அடுத்த 6-12 மாதங்களுக்குள் திட்டப் பணிகள் முழு வடிவம் பெறும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மேலும், காஞ்சிபுரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் உற்பத்தி, தரவு மையங்களை உள்ளடக்கிய மற்றொரு தொழில்முறை உலக வா்த்தக மையத்தை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசு-தனியாா் கூட்டாண்மை முறையில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், நிலம் மற்றும் கொள்கை அளவிலான ஆதரவை அரசிடம் கோரியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.