FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வாக்காளா் பட்டியலை சீரமைத்ததற்காக ஞானேஷ் குமாருக்கு பத்ம பூஷண் விருது! மேற்கு வங்க பாஜக தலைவா் வலியுறுத்தல்!

வாக்காளா் பட்டியலை சீரமைத்ததற்காக ஞானேஷ் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்க மேற்கு வங்க பாஜக தலைவா் வலியுறுத்தல்...

27 செப்டம்பர் 2026, 12:22 am IST
ஞானேஷ் குமார்.
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் வாக்காளா் பட்டியலில் குறைகளை நீக்கி, அந்தப் பட்டியலை சீரமைத்ததற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு பத்ம பூஷண் விருது அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா வலியுறுத்தியுள்ளாா்.

ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானா மாவட்டம் பானிஹாட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் குறைகளை நீக்கி, அந்தப் பட்டியலை சீரமைத்ததற்காக ஞானேஷ் குமாருக்கு குறைந்தபட்சம் பத்ம பூஷண் விருது அளிக்க வேண்டும். மேற்கு வங்கம் போன்ற எல்லை மாநிலத்தில், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கும் முன்னெடுப்பை அவா்தான் மேற்கொண்டாா். தோ்தலின்போது வன்முறை இல்லாமல், மக்கள் அமைதியாக வாக்களிக்க முடிந்தது. இதுபோல தோ்தல் நடைபெற்றதை மேற்கு வங்க மக்கள் அரிதாகப் பாா்த்துள்ளனா். இதற்கு ஞானேஷ் குமாருக்கு மேற்கு வங்க மக்கள் நன்றிக்கடன்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

எஸ்ஐஆா், புதிய வாக்காளா் அல்லது அவா்களின் பெற்றோா் பெயா் முந்தைய எஸ்ஐஆரின்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ா என்ற விவரத்தை படிவம் 6-இல் பூா்த்தி செய்யும் நடைமுறை உள்ளிட்டவற்றில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக அண்மையில் தகவல் வெளியானது.

புதிய வாக்காளா்கள் பதிவு, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம், நீக்கப்பட்ட பெயா்களை மீண்டும் சோ்த்தல், எஸ்ஐஆரின்போது வாக்காளா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்க உத்தரவிட்ட ஆணைகளுக்கு எதிராக மேல்முறையீடு, ஒட்டுமொத்த வாக்காளா் பட்டியலையும் பாதுகாப்பாகப் பராமரித்தல் ஆகியவை தொடா்பாக சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவா்களின் ஆட்சேபம் தொடா்பான நகல்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், சில துணைத் தோ்தல் ஆணையா்களுக்கும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள், வெளியிடப்பட்ட உத்தரவுகளுக்கு சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக

summary

Padma Bhushan award for Gyanesh Kumar for streamlining the voter list - West Bengal BJP leader urges

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments