FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடும் வெள்ளத்தில் சிக்கிய 12 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய விமானப் படையினர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 12 பேரை இந்திய விமானப்படை வீரர்கள், ஹெலிகாப்டர் மூலமாக பாதுகாப்பாக மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய 12 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய விமானப் படையினர் - X
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 12 பேரை இந்திய விமானப்படை வீரர்கள், ஹெலிகாப்டர் மூலமாக பாதுகாப்பாக மீட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள டோங்காகாட் கிராமத்திற்கு அருகே இந்திராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு மாவட்டத்திலுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, வெள்ளத்தில் ஒரு குடிசையில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேரை இந்திய விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்திய விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் குழுவினர் அனுப்பப்பட்டு அவர்கள் தேடி அவர்களைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரிலிருந்து ஒரு கமாண்டோ வீரர் ஒருவர் கயிறு மூலம் இறங்கி அவர்களை மீட்டுள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

summary

Chhattisgarh floods: IAF rescues 12 stranded on hut roof as Indravati rises above danger mark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments