FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜென் ஸீ பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்: ராகுல் காந்தி

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக ஜென் ஸீ பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்

ராகுல் காந்தி
பகிர்:

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக ஜென் ஸீ பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் பெண்களையே தண்டிப்பதை நிறுத்துங்கள்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்காகப் பெண்களையே தண்டிப்பதை நிறுத்துங்கள். பெண்கள் நாடு முழுவதும் தெருக்களில் நடக்கவும், பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளாக நேருமோ என்றும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், அரசு இதற்கு தீர்வாக அவர்களை வீட்டிற்குள்ளேயே இருக்கச் சொல்கிறது.

இது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டி பாதுகாக்கு அமைப்பு இது. இதனைத் தகர்த்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெண்களை வீட்டினுள் அடைத்து வைப்பது இதற்கான தீர்வு அல்ல. மாறாக, நம் தெருக்களை பாதுகாப்பானதாக மாற்றி, பெண்களைத் தவறாக நடத்த நினைக்கும் ஆண்களின் மனநிலையை எதிர்த்து, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோரை பாரபட்சமின்றி தண்டிப்பதுதான் உண்மையான தீர்வு.

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதுமுள்ள இளம்பெண்கள், குறிப்பாக ஜென் ஸீ பெண்கள், பெருமளவில் இதுபோன்ற போராட்டங்களில் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் வலியை இந்த அரசு பொருட்படுத்தவில்லை. கடும் நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே உங்களின் குரல்களுக்கு இந்த அரசு செவிசாய்க்கும்.

அமைதியான முறையில் போரடுவது உங்களின் ஜனநாயக உரிமை. நான் இதற்காக முழு மனதுடன் உங்களுக்கு துணை நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Gen Z women must take to the streets and protest: Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments