FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாா் விவகாரத்தில் அடுத்து என்ன? காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை!

ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை...

காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை - Photo: INC
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக இந்திரா பவனில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஞானேஷ் குமார் பதவி விலகினாலும், தவறுகளுக்கு பதிலளித்தாக வேண்டும் என்று ராகுல் காந்தி நேற்று பேசியிருந்த நிலையில், அவா் பதவி விலகிய பிறகும் அவருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள தோ்தல்களுக்கு காங்கிரஸ் கட்சியை தயாா்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (செப்.30) நடைபெறுகிறது. இக்கூட்டத்திலும் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் நோட்டீஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

What next in the Gyanesh Kumar matter? Congress Working Committee to deliberate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments