FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல்பூரி - 18-06-2026

இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாய்ச் சென்ற நவீன், தெருநாய் ஒன்றின் மேல் மோதி கீழே விழுந்து, ஒரு சில நிமிடங்கள் சுயநினைவு இழந்தான்.

Updated On : 19 ஜூலை 2026, 4:11 am IST
பகிர்:

கண்டது

(ஈரோட்டில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

'கூகுள் மேப் வழியைக் காட்டும்... குழியைக் காட்டாது!'

Advertisement

Advertisement

-கி. சரஸ்வதி, ஈரோடு.

(அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'நாயகனை பிரியாள்.'

-ரா.ராஜேஷ்குமார், திண்டுக்கல்.

(புதுச்சேரி தவளகுப்பம் பகுதியில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'காசான்திட்டு.'

-பி.ஆஷாலட்சுமி, செம்பனார்கோவில்.

கேட்டது

(விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருவர்)

'என் மனைவி மாதிரி சாமர்த்தியசாலி யாரும் இருக்க முடியாது!'

'என்ன சொல்றீங்க?'

'பூ வாங்கினால்கூட கை நீளமாக உள்ள பொண்ணுகிட்டத்தான் வாங்குவாள்.'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருப்பூர் பார்க் ரோட்டில் இரு ஆண்கள் பேசியது)

'தாய்க்குப் பின் தாரங்கிறது உண்மைதாங்க!'

'எப்படி?'

'அம்மாவுக்கு அப்புறம் நம்மளை கைநீட்டி அடிக்கிறது அவங்க தானே!'

-செ.ந.வடிவேல், திருப்பூர்.

(நாகப்பட்டினம் பூங்காவில் இரண்டு பேர்)

'நைட்ல ரொம்ப நேரம் பீச்ல போய் உட்காந்து இருக்கீங்களே... வீட்ல சம்சாரம் பிரச்னையா?'

'ம்ஹூம்... மின்சாரம் பிரச்னை!'

-நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.

யோசிக்கிறாங்கப்பா!

வயதுக்குத் தகுந்த சந்தோஷங்களை அனுபவித்தவர்களைவிட வயதுக்கு மீறிய துன்பங்களை அனுபவித்தவர்கள்தான் அதிகம்.

-பி. கோபி, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாய்ச் சென்ற நவீன், தெருநாய் ஒன்றின் மேல் மோதி கீழே விழுந்து, ஒரு சில நிமிடங்கள் சுயநினைவு இழந்தான். சற்று நேரம்கழித்து மெல்ல நினைவு திரும்பி எழ முடியாமல் தவித்தவன், 'தன்னை யாரும் தூக்கி, தண்ணீர் கொடுத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்களா?' எனக் கலக்கத்துடன் எதிர்நோக்கி, சுற்றி நிற்பவர்களை ஏக்கமாய்ப் பார்த்தான்.

அத்தனை பேரிடம் உள்ள செல்போன் கேமரா மட்டும் நவீனை விழுங்கிக் கொண்டிருந்தன.

யாரோ ஒருவர், 'கவனம் இல்லாத பயணத்தால் ஒருவனின் நிலையைப் பார்த்தீர்களா? அடிபட்டு துடித்துக் கொண்டு கிடக்கிறார்...' நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

'அட! மனசாட்சியற்ற மிருகங்களா...' நவீன் தன் மனதுக்குள் கர்வ, 'டேய்... நவீன்... நேற்றுவரை நீயும் இதைத்தானடா செய்தாய்...' அவன் மனசாட்சியின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

எஸ்.எம்.எஸ்.

இடையூறின்றி வேலையை முடிப்பவன் புத்திசாலி...

இடையூறுக்கு இடையே முடிப்பவன் திறமைசாலி!

-எம்.ரவீந்திரன், திருமருகல்.

அப்படீங்களா!

பல்வேறு வகையிலான எழுத்து உள்ளீடு சேவைகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம், கையொப்பத்துக்காக புதிய செயலியைத் தொடங்கி உள்ளது.

'சிக்னேச்சர் ஆப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் இணைத்து, சர்வதேச அளவில் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாம் காகிதங்களில் கையொப்பம் இடுவதைப்போல், கைப்பேசி திரையில் கையொப்பம் செய்துவிட்டு, அதைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஆவணங்களில் பயன்படுத்தும் வகையில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் தரமாக பல்வேறு செயலிகள் இந்தச் சேவைகளை வழங்கி வரும்போதிலும், தகவல் பாதுகாப்புக்கு கூகுள் செயலியைப் பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நமது பெயரை எழுத்துகளாகப் பதிவிட்டு ஃபான்ட் ஸ்டைலிலும் கையொப்பத்தைப் பெறும் வகையில் புதிய சேவை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சேவையைப் பெற கூகுள் பிளேவில் சிஸ்டம் அப்டேட் - செக் பார் அப்டேட் சென்று, புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்னேச்சர் ஆப்பை பதிவிறக்கம் செய்துவிட்டு, மேனேஜ் சிங்னேச்சர் ஆப்பைப் பயன்படுத்தலாம். இதில் உருவாக்கப்படும் கையொப்பங்கள் நமது தேவைக்கு ஏற்ப ஆவணங்களில் சேர்த்து எண்ம வழியில் அனுப்பி வைக்க உதவும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments