FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல்பூரி - 03-05-2026

உலகின் அழிவுக்கு முக்கியக் காரணம்... கெட்டவர்கள் அல்ல; வேடிக்கை பார்க்கும் நல்லவர்களே!

Updated On : 3 மே 2026, 4:10 am IST
பகிர்:

பேல்பூரி

கண்டது

(கரூரில் தனியார் அலுவலகம் ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

Advertisement

Advertisement

'உலகின் அழிவுக்கு முக்கியக் காரணம்... கெட்டவர்கள் அல்ல; வேடிக்கை பார்க்கும் நல்லவர்களே!''

எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(ஆற்காடு - செய்யாறு சாலையில் உள்ள ஊர் ஒன்றின் பெயர்)

'முப்பதுவெட்டி''

ப நரசிம்மன், தருமபுரி.

(சென்னை மயிலாப்பூரில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)

'மரணமே வந்தாலும் எதிரி முன் அழாதே!''

ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

கேட்டது

(விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருவர்)

'ஊர் பெயர் தெரியாதவங்களுக்கெல்லாம் நீ கடன் கொடுக்கிறீயே... திரும்பிவருமா?''

'நல்லா தெரிஞ்ச உனக்கே நான் கடன் கொடுத்தேன்... நீயே திருப்பித்தரலை. இதுல அட்வைஸ் வேற...''

கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருச்சி பூங்கா ஒன்றில் இருவர்)

'வீட்டுக்குக் கிளம்ப மனசே வரலை!''

'அது சரி... வீட்டுல வெப்ப அலை வீசுதுங்கிறதுக்காக இங்கேயே டேரா போடமுடியுமா... சொல்லுங்க!''

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(கோவை சாய்பாபா காலனி தேநீர்க் கடையில் இருவர்)

'என்ன தரகரே... என் பையனுக்கு பொண்ணு பாக்கச் சொல்லி கேட்டா, மூணு பொண்ணோட போட்டோவைக் காமிக்கிறீங்க?''

'நீங்கதானே நல்ல அழகு, அறிவு, படிச்ச பொண்ணு கேட்டீங்க... இதுல முதலாவது அறிவு, இரண்டாவது படிச்சது , மூன்றாவது அழகு!''

எம்.பி.தினேஷ், கோவை.

யோசிக்கிறாங்கப்பா!

'வெற்றி என்பது அதிர்ஷ்டத்தில் இல்லை ...

நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இருக்கிறது.''

க. பூமலை, நமசிவாயபுரம்.

மைக்ரோ கதை

வேங்கை நாட்டு அரசவையில் மன்னன் வேங்கையன் கம்பீரமாக அமர்ந்திருக்க, உலகப் புகழ் ஆருடப் பேரொளி ஜோதிடர் சிகாமணி சித்தன் நடுவே அமர்ந்திருந்தார்.

ஜோதிடர் மன்னருக்கு என்ன பலன் கூறப்போகிறார் என்பதை அறிய அவையினர் ஆவலாக இருந்தனர்.

'நான் எவ்வளவு காலம் வாழ்வேன்?' என்பதுதான் மன்னரின் கேள்வி.

'நூறு ஆண்டுகள்' என ஜோதிடர் கூற வேண்டும் என்பதே மன்னரின் எதிர்பார்ப்பு. ஆனால், கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, 'மன்னா! உங்கள் ஆயுள்காலம் முடியப் போகிறது. கூடிய விரைவில் இறந்துவிடுவீர்கள்'' என்று பட்டென்று கூறிவிட்டார் ஜோதிடர். அவ்வளவுதான், முகம் சிவந்த மன்னன் உடை வாளை உருவி, ஜோதிடரின் கழுத்தில் வைத்தான்.

'முட்டாள் ஜோதிடரே, கூறும் நீர் எப்போது சாவீர்?''

பதில் என்ன சொன்னாலும், அவரது கழுத்து துண்டிக்கப்படும் நிலை. அந்த நிலையிலும், 'மன்னா... தாங்கள் மரணமடைவதற்கு ஒருநாள் முன்பே, நான் இறந்துவிடுவேன்'' என்றார் கட்டுப்படுத்திக் கொண்ட அமைதியுடன். மன்னனின் வாளும் மெல்லப் பின்வாங்கி உறையில் போய் பதுங்கிக் கொண்டது.

வசீகரன், தேனாம்பேட்டை.

எஸ்.எம்.எஸ்.

'இருளில் இருப்பதற்கு எதுவுமே செய்யவேண்டாம்...

ஒளியாய் இருப்பதற்கு உழைத்தே ஆகவேண்டும்!''

அ.கருப்பையா, பொன்னமராவதி.

அப்படீங்களா!

மெட்டா நிறுவனத்தின் எழுத்துவடிவ தகவல் பரிமாற்றச் செயலியான திரெட்ஸில் புதிய 'சாட் நேரலை' சேவை அறிமுகமாகி உள்ளது.

சமூக ஊடகங்களின் போட்டியை சமாளிக்க இந்த சாட் நேரலையை மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ளது.

ஒரு தலைப்பின் கீழ் நடைபெறும் விவாதத்தில் நேரலையாக 150 பேர் பங்கேற்று, தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்த விவாதத்தைக் கண்டு அதில் எழுப்பப்படும் கருத்துகள் குறித்து வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

இந்த விவாதத்தின்போது விடியோக்கள், புகைப்படங்கள், இணையதள பக்க லிங்குகள் ஆகியவற்றையும் பகிரலாம். அண்மையில் நடைபெற்ற என்பிஏ கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்த சேவை தொடங்கப்பட்டது. அதில் பிரபல என்பிஏ வீரர்களின் பெயரில் நடத்தப்பட்ட சாட் நேரலையில் பலர் கலந்துகொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இந்த சாட் நேரலை முடிந்த பின்னரும் அதில் உள்ள தகவல்கள் அப்படியே சேமிக்கப்பட்டு இருக்கும்.

நேரலை விவாதத்தை ஊக்குவிக்க இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையைத் தொடங்க கம்யூனிட்டி பிரிவுக்குச் சென்று சாட்டுக்கு பெயரைப் பதிய வேண்டும்.

அந்த சாட் தொடங்கும் நேரம் முடியும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த சாட்டை பிரபலப்படுத்தி உறுப்பினர்களைச் சேர்க்க திரெட் பீட் அல்லது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிரலாம்.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments