FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேல்பூரி - 08-11-2026

'நீ சாலையைப் பாத்து ஓட்டினா சமத்து... வேடிக்கை பார்த்தபடி ஓட்டினா விபத்து!'

7 நவம்பர் 2026, 6:59 pm
பகிர்:

கண்டது...

(சென்னை பல்லாவரத்தில் ஆட்டோவில் கண்ட வாசகம்)

'நீ சாலையைப் பாத்து ஓட்டினா சமத்து...

Advertisement

Advertisement

வேடிக்கை பார்த்தபடி ஓட்டினா விபத்து!'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

----------------------------------------------------------------------------------------------

(திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'சுள்ளேறும்பு.'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

----------------------------------------------------------------------------------------------

(கோவை கோவில்பாளையத்தில் ஓட்டல் ஓன்றின் பெயர்)

' தண்டச் சோறு.'

-ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி.

----------------------------------------------------------------------------------------------

(புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றின் பெயர்)

'சுவை அரசன்.'

-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா...

'அரைகுறை அறிவு அரைக்கிணறு தாண்டுவது போன்றது.'

-த.பாலசுப்பிரமணியன், கோவை.

எஸ்.எம்.எஸ்.

'கைகட்டி நின்ற இடத்தில்

கைதட்டல் நிற்கும்வரை முயற்சி செய்!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.