நீதிக் கதைகள்! புத்திசாலி சிறுவன்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
அன்று மந்திரி, அரசவைக்கு ஒரு பத்து வயது சிறுவனைக் கூட்டி வந்திருந்தார்.
மன்னரிடம் அவர் 'மன்னா! இந்தச் சிறுவன் கேட்கும் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்று சவால் விடுகிறான்!' என்று சொல்ல, மன்னர் ''அந்தச் சிறுவன் கேட்கும் கேள்விக்கு இங்குள்ள மதியூக விற்பன்னர்கள் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.
அந்தச் சிறுவன் ஒரு சட்டியில் மணல் கொண்டு வரச்சொன்னான். மணலும் வந்தது. அதைக் கையில் அள்ளிய அவன் மணலைப் பார்த்து எண்ணுவதுபோல முனகினான். பிறகு தன் கையை மூடியவன் 'இது எவ்வளவு மணல்?' என்று கேட்டான்.
Advertisement
Advertisement
சிலர் விழித்தார்கள். சிலர் 'சுமாராக ஒரு லட்சம் மணல் இருக்கும்!' என்றனர். வேறு சிலர் 'இல்லை! இரண்டு லட்சம் மணல் இருக்கும்!' என்றார்கள்.
மன்னர் மந்திரியைப் பார்க்க, அவரும் 'கண்டிப்பாக மூன்று லட்சம் மணல் இருக்கலாம் மன்னா!' என்றார்.
மன்னர் எதுவும் பேசாமல் சிறுவனைப் பார்த்து 'நீ சரியாகச் சொல், பார்ப்போம்!' என்றார்.
சிறுவன் 'நான் கையில் எடுத்து எண்ணுவதுபோல் பாவனைதான் செய்தேன். இது உண்மையில் ஒரு கைப்பிடி மணல்தான்!' என்றான்.
மற்றவர்கள் தலைகுனிய, மன்னர் அவனை அருகில் அழைத்து 'உண்மையிலேயே நீ புத்திசாலி சிறுவன்தான். இதோ பரிசாக பொற்காசுகள்!' என்று தந்தார்.
சிறுவன் மன்னரைப் பார்த்து 'நன்றி மன்னா!' என்று சொல்லிக் கிளம்பினான்.
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.