சாயல்குடி, கமுதியி்ல் பிரதோஷ உற்ஸவம்
சாயல்குடி, அக் 9: சாயல்குடி, கமுதியில், ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தான, தேவஸ்தானத்திற்குப் பாத்தியமான சிவாலயங்களில், பிரதோஷ உற்ஸவம், ஸ்ரீநந்நீஸ்வரர் சன்னிதானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கமு
சாயல்குடி, அக் 9: சாயல்குடி, கமுதியில், ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தான, தேவஸ்தானத்திற்குப் பாத்தியமான சிவாலயங்களில், பிரதோஷ உற்ஸவம், ஸ்ரீநந்நீஸ்வரர் சன்னிதானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
கமுதி ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு அபிசேகங்கள் செய்து, சிறப்பு மலர் அலங்கார, தீப ஆராதனை பூஜைகளை அர்ச்சகர் கே.சந்துரு குருக்கள் நடத்தினார். உற்ஸவத்தை முன்னிட்டு வெள்ளி நந்தி வாகனத்தில், சுவாமி-அம்பாள் பவனி, கோயி்ல வளாகத்தில் நடைபெற்ரது. பிரதோஷ உற்ஸவ குழுவினர் உள்பட பலரும் உ ற்சவத்தில் கலந்து கொண்டனர். சாயல்குடி ஸ்ரீமீனாட்சி சமேத கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள் செய்து அர்ச்சகர் ரவிச்சந்திர குருக்கள், சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.