சாத்தூர் அருகே சாலை விபத்தில் சட்டகல்லூரி முதல்வர் சாவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி
சாத்தூர் அருகே சாலை விபத்தில் மதுரை அரசு சட்டகல்லூரி முதல்வர் சாவு,சாத்தூர் தாலூகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(55)இவர் மதுரை அரசு சட்டகல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்,இவரது மனைவி செல்வின்மேரி(53)இவரது சகோதரி மரியசெல்வம் ஆகிய மூவரும் திங்கள்கிழமை காலை நாகர்கோவிலிலிருந்து-மதுரை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.சாத்தூரை அடுத்த சத்திரபட்டி அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது,காரின் டயர் வெடித்து கார் விபத்துகுள்ளானது.இந்த விபத்தில் ஜான்சன் அவரது மனைவி செல்வின்மேரி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து,சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.
இதில் ஜான்சன் மட்டும் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Advertisement