ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த பல ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்று வந்தது. முதன்முறையாக இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ். கலநதாய்வு நடைபெற உள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நவீன வசதிகளைக் கொண்ட இரண்டு கூட்ட அரங்குகளைக் கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை இனி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.