FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக வழக்குப் பதிவு

பழனியில் போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 24 ஜூன் 2015, 5:17 pm IST
பகிர்:

பழனியில் போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி சிவகிரிப்பட்டி திருநகரை சேர்ந்தவர் பத்மநாபன்.  இவர் ஓம்சண்முகாதியேட்டர் இட்டேரி ரோட்டில் சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சித்ரா, சுமதி ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.  அதே வேளை அதே நிலத்துக்கு போலியான பத்திரத்தை தயாரித்து முனியாண்டி மகன் விஜயன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சித்ரா, சுமதி உதவியுடன் வேறு ஒருவருக்கு விற்க முயற்சி செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் பத்மநாபன் தொடர்ந்து வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற உத்திரவின் பேரில் நிலத்துக்கு உரிமையாளர்களான நான்கு பேர் மீதும் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments