தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் பதவி காலம் மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கான வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டைப்போல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டுவந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த வடமாநிலங்களில், பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதாவது, ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தல் தேதி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று முன்தினம் கூறியிருந்தார். என்றாலும், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
தில்லியில், இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று மாலை பத்திரிகையாளர்கள் மத்தியில் இதை அறிவிக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.