FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.

தேர்வு எழுத இருப்பவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் 410 பள்ளிகளில் இருந்து 51,091 மாணவ-மாணவிகள் 145 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,617 பேர் மாணவர்கள். 27,474 பேர் மாணவிகள்.

Advertisement

Advertisement

அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில் 135 பள்ளிகளைச் சேர்ந்த 14,337 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் 6,556 பேர் மாணவர்கள். 7,781 பேர் மாணவிகள். தமிழகம், புதுவையில் 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments