மக்கள் நல கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம் : ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தகவல்
புதுச்சேரி மாநில மக்கள் நல கூட்டணியில் பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில மக்கள் நல கூட்டணியில் பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நல கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு விடும்.
Advertisement
Advertisement
100 மையங்களில் கூட்டணி சார்பில் மக்கள் பிரசார இயக்கம் நடத்த திட்டமிட்டு இதுவரை 90 மையங்களில் பிரசாரத்தை முடித்துள்ளோம். மக்கள் எங்கள் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பட்ஜெட்டில் புதுவை புறக்கணிப்பு
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டுகளில் புதுவை மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கான நிதியை கடந்த பட்ஜெட்டை விட குறைத்து விட்டனர்.
பெரு வணிக நிறுவனங்களுக்கு பாஜக அரசு சலுகைகளை வழங்கி உள்ளது பல்வேறு மாநில முதல்வர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த கருத்தும் கூறாதது வியப்பை அளிக்கிறது.
நகைக் கடை வியாபாரிகள் போராட்டத்துக்கு மக்கள் நல கூட்டணி ஆதரவு அளிக்கும். கலால் வரியை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5-ம் தேதி ஆர்ப்பாட்டம்
சீதாராம்யெச்சூரி, டி.ராஜா, ராகுல்காந்தி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளதைக் கண்டித்து வரும் 5-ம் தேதி தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து வரும் 7-ம் தேதி வில்லியனூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் விஸ்வநாதன்.
கூட்டணி நிர்வாகிகள் நாரா.கலைநாதன், முருகன், ராஜாங்கம், வெ.பெருமாள், தேவ.பொழிலன், சந்திரசேகரன், லெனின், உள்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.