FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மார்ச் 9ம் தேதி திருமலை ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்படும்:  தேவஸ்தானம் அறிவிப்பு

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை, ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. மார்ச், 9 காலை, 5:34 மணி முதல், 9:08 மணி வரை, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை, ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. மார்ச், 9 காலை, 5:34 மணி முதல், 9:08 மணி வரை, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.

கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன், கோவில் நடை சாத்தப்படும் என்பதால், மார்ச், 8 இரவு, 8:30 மணிக்கு, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட உள்ளது. சூரிய கிரகணம் முடிவுற்ற பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்து, புண்ணியாவசனம் நடத்திய பின், கோவில் நடை திறக்கப்படும். அதன் பின், பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, மார்ச், 9 காலை நடைபெற இருந்த, ஸஹஸ்ர கலசாபிசேகம் ரத்து செய்யபட்டுள்ளது என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments