மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,633 கனஅடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 15,487 கனஅடியில் இருந்து 11,633 கனஅடியாகச்
சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 15,487 கனஅடியில் இருந்து 11,633 கனஅடியாகச் சரிந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 15,487 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 11,633 கனஅடியாகச் சரிந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 17,500 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தை விட, பாசனத்துக்கு கூடுதலாக நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 119.09 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாக இருந்தது.
Advertisement
Advertisement
பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 14,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 29-வது நாளாக தடை நீடித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.