FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவாரா?

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத்தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவாரா?

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத்தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்ற பேச்சு அனைத்து தரப்பிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) ஓய்வுபெற்றதை அடுத்து அந்தப் பதவி கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்குள், மாநிலங்களவைக்கு புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை அந்த அவையின் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அண்மையில் வெளியிட்டார். 

Advertisement

Advertisement

இதையடுத்து தேர்தல் இன்று வியாழக்கிழமை காலை (ஜூலை 9) 11 மணிக்கு நடைபெறுகிறது.  இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான காங்கிரஸ் எம்.பி. பி.கே. ஹரிபிரசாத் இடையே போட்டி நிலவுகிறது.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் ஓரிடம் காலியாக உள்ளது. எஞ்சிய 244 இடங்களில், 123 உறுப்பினர்களின் ஆதரவு இருப்போர், துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவர். மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே, பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என தெரிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஹரிவன்ஷுக்கு ஆதரவாக 126 எம்.பி.க்கள் வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகவும், 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், ஹரிவன்ஷுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 91 உறுப்பினர்கள், 3 நியமன உறுப்பினர்கள், அமர்சிங் எம்.பி. ஆகிய 4 பேரின் ஆதரவு, அதிமுக (13), தெலங்கானா ராஷ்டிர சமிதி (6), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2), இந்திய தேசிய லோக் தளம் (1), பிஜு ஜனதா தளம் எம்.பி.க்களின் ஆதரவும் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத்துக்கு, காங்கிரஸ் கூட்டணியின் 61 உறுப்பினர்களையும் சேர்த்து, திரிணமூல் காங்கிரஸ் (13), சமாஜவாதி (13), தெலுங்கு தேசம் (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (5), பகுஜன் சமாஜ் (4), திமுக (4), இந்திய கம்யூனிஸ்ட் (2), மதச்சார்பற்ற ஜனதா தளம் (1), மேலும் 2 எம்.பி.க்களையும் (தலா ஒரு நியமன எம்.பி. மற்றும் சுயேச்சை எம்.பி.) சேர்த்து மொத்தம் 111 எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச கணக்குகள் எப்படி இருந்து உறுதியளிக்கும் கணக்குளின் படி இழுத்து பிடித்து பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று பெற்றுவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments