FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் சங்க செயற்குழுவில் வாஜ்பாய்க்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது: தமிழிசை

நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு கண்டனம்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:19 am IST
பகிர்:


சென்னை: நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 -ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும், நடிகர்கள் விஜயகுமார், ஆனந்தராஜ், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கென தனிக் கட்டடம் உருவாக்கப்பட்டு வருவதால், அந்தப் பணிகளை முடிக்கும் வகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சங்கத் தேர்தல் இல்லை என நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

Advertisement

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், சங்க வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 2017-18 -ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவுக் கணக்குகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்க பதிவில், நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே, முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினரும், பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments