சொத்து குவிப்பு வழக்கு: மத்திய கலால் வரித்துறை அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறை 4 ஆவது பிரிவு அலுவலகத்தின் தணிக்கைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான பணிகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.40 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியது சிபிஐக்கு தெரியவந்தது. இதற்கு முத்துக்குமாரசாமியின் மனைவி கிருஷ்ணாபாய் உடந்தையாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள 14 ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமாரசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணாபாய் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.