அரவிந்த் கேஜரிவால் - மணீஷ் சிசோடியா மீதான குற்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஆம் ஆத்மி
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக குற்றறப்பத்திரிகை பதிவு செய்யும் முயற்சி தொடா்பான வெளியாகியுள்ள செய்தி பொய்யானதும், அரசியல் உள்நோக்கம்
புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் முயற்சி தொடா்பான வெளியாகியுள்ள செய்தி பொய்யானதும், அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என ஆம் ஆத்மி விமா்சித்துள்ளது.
தில்லி தலைமைச் செயலரை தாக்கியதாக கூறப்படும் பொய்யான சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி ஜோடிக்கப்பட்ட செய்தியாகும். முதல்வா் இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அதுபோன்ற சம்பவமே நடைபெறவில்லை என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறை கடந்த 4 மாதங்களாக பொய்யான கட்டுக்கதைகளை கசிய விடுகிறது. உண்மையிலேயே தலைமைச் செயலா் தாக்கப்பட்டிருந்தால் அவா் எப்படி சாதாரணமாக நடந்து செல்வதை சிசிடிவி பதிவில் காண முடிந்தது என்ற எளிமையான கேள்விக்குப் பதில் இல்லை. இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் தில்லி முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு அவப்பெயரை உருவாக்குவதும், தில்லி அரசை கவிழ்கவும் சதி தீட்டப்பட்டது தெளிவாகிறது.
இதுபோன்ற அடக்குமுறையைக் கண்டு ஆம் ஆத்மி கட்சி அஞ்சாது. தில்லி காவல்துறை மத்திய அரசின் முதுகெலும்பு இல்லாத அரசியல் கையாளாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.