கரோனா துயரம்: மகாராஷ்டிரத்தில் ஒரே தகன மேடையில் 4 உடல்கள்
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால் 4 பேரை ஒரே தகன மேடையில் எரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால் 4 பேரை ஒரே தகன மேடையில் எரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.
தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் உள்ள தகன மேடைகளுக்கு கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வருகிறது.
Advertisement
Advertisement
24 மணிநேரமும் உடல்களை தகனம் செய்தும், எரியூட்டுவதற்காக வரிசையில் உடல்களை வைத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கராத் நகரில் உள்ள ஒரு சுடுகாட்டில் 4 உடல்களை ஒரே தகன மேடையில் எரிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால், தகன மேடைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு பல மாநிலங்களில் இந்த நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.