FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்னும் சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கிறார்.

Updated On : 26 மார்ச் 2022, 5:32 pm IST
இலங்கைத் தலைநகர் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்...
பகிர்:

இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்னும் சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கிறார்.

இந்தத் தகவல்களை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மட்டுமின்றி மாலத்தீவுகளுக்கும் செல்லும் ஜெய்சங்கர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்பதுடன், பல்வேறு உடன்பாடுகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பின் பேரில் வாரக் கடைசியில் மாலத்தீவிலுள்ள அட்டுவிற்குச் செல்கிறார்   ஜெய்சங்கர்.

பின்னர் இலங்கை வந்து, மார்ச் 28 முதல் 30 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments