FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் மர்ம காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு!

உகாண்டா நாட்டில் உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் மர்ம காய்ச்சலால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி..

Updated On : 16 டிசம்பர் 2024, 4:00 pm IST
கோப்புப்படம்
பகிர்:

உகாண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு மக்களினால் ’டிங்கா டிங்கா’ என்று அழைக்கப்படும் இந்த மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாக கூறப்படுகின்றது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாம்.

இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோய் பரவிய மாவட்டத்தின் சுகாதாரத் துறை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுவதாகவும். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயிக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்று இதற்கு முன்னர் 1518 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் ப்ளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments