முகப்பு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் யானையின் சடலம் மீட்பு!

ஒடிசாவில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் யானையின் சடலம் மீட்கப்பட்டதைப் பற்றி...

Updated On : 30 டிசம்பர் 2024, 4:32 pm IST
கோப்புப் படம் - dot com
பகிர்:

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அங்குல் மாவட்டத்திலுள்ள போக்குண்டா வனப்பகுதியில் நேற்று (டிச.29) காலை மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் யானை கொல்லப்பட்டதிற்கான காரணாம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கடந்த சனிக்கிழமை (டிச.28) இரவு அந்த யானையை வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாகவும், ஆனால் அந்த யானையின் தந்தங்கள் அகற்றப்படாமல் இருப்பதினால் அதனை எதற்காக அவர்கள் வேட்டையாடினார்கள் என்ற காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத ஐந்து விஷயங்கள்!

நன்றாக வளர்த தந்தங்களை உடைய அந்த ஆண் யானையின் தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டு அது கொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (டிச.30) அந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் உடற்கூராய்வு சோதனை செய்யவுள்ளனர்.

தற்போது வரையில் அந்த யானை கொல்லப்பட்டதற்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் எனவும் இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.