பதான் - 2!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பதான் - 2 உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்து அசத்தியது. தொடர்ந்து, அவர் நடித்த ஜவான் படமும் ரூ.1200 கோடிக்கு அதிகமாக வசூலித்து பெரிய வெற்றிப்படமானது.
பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான் நடிக்க இருந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி பதான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பதான் - 2 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஃபைட்டர் திரைப்படமும் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.