இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிய திரைப்படங்கள் எவை?
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.
வாரந்தோறும் ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சிங்கப்பூர் சலூன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
பாமகலாபம் 2 என்ற தெலலுங்கு மொழி திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. தி இந்திராணி முகர்ஜி ஸ்டாரி என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நிமிஷா சஜயன், திபியேந்தி, ரோஷன் மேத்யூ நடிப்பில் வெளியான போச்சர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.