வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தில் 13 முக்கிய கதாபத்திரங்கள் நண்பர்களாக நடித்துள்ளார்கள். இப்படத்தின் 2 பாடல்களை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளனர்.
இந்த நிலையில், நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.