கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..pdf
Preview

ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும் , கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ராமு ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புது திருப்பூர் பகுதி வளர்ச்சிக் குழு மேலாண் இயக்குநராக ஹனீஷ் சாப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைச் செயல் அதிகாரியாக ஏ. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT