முகப்பு
தற்போதைய செய்திகள்

கொலையாளிக்கு பொதுமன்னிப்பு: இலங்கை நீதிமன்றம் ரத்து

முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Updated On : 7 ஜூன் 2024, 9:57 am IST
முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன
பகிர்:

கொழும்பு: இலங்கையில் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரமந்த ஜெயமஹா என்பவருக்கு முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த நாட்டுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு சுற்றுலா வந்திருந்த 19 வயது ஸ்வீடன் பெண்ணை ஜெயமஹா அடித்துக் கொலை செய்தாா். கொல்லப்பட்ட பெண்ணின் மண்டையொடு 64 இடங்களில் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் ஜெயமஹா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மேல்முறையீட்டில் மரம தண்டைனையும் விதிக்கப்பட்டது.எனினும், ஜெயமஹாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன பொதுமன்னிப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

அதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது.

மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் (இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஸ்ரீசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கெனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக ஸ்ரீசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையிலேயே அவா் இதுவரை பாதியைத்தான் செலுத்தியுள்ளாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.