ராகுல் காந்திக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து முகநூலில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
புதிய பதவிக்குத் தோ்வாகியுள்ள எனது சகோதரா் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடா்ந்து வலிமையாக ஜிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளாா்.