முகப்பு
தற்போதைய செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஜூன் 2024, 2:22 pm IST
பகிர்:

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்ததாவது:

வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள்/சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

சட்டப்பேரவை இன்று (ஜூன் 26) காலை 9.30 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments