ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள்.  படங்கள்: இன்ஸ்டாகிராம்
தற்போதைய செய்திகள்

45 வயதிலும் தீயாக உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா! வைரல் விடியோ!

நடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி விடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் ‘சைத்தான்’ படம் உருவாகியுள்ளது. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

மாதவன் - ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்களுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ஜோதிகா தற்போது தீயாக உடற்பயிற்சியாக செய்கிறார். மேலும் இது குறித்து ஜோதிகா, “பிட்னஸ் என்பது உடல் எடையை குறைப்பது அல்ல; ஆனால் வாழ்க்கையை திரும்பப் பெறுவது” எனக் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் மீண்டும் களமிறங்கிய ஜோதிகாவின் வயது 45-இல் இருந்து குறைந்துக் கொண்டு வருவதாக ரசிகர்கள் கமெண்டுகளில் புகழ்ந்து வருகிறார்கள்.

ஜோதிகாவின் சைத்தான் படம் மார்ச் 8-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

SCROLL FOR NEXT