FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

Updated On : 3 நவம்பர் 2024, 10:47 am IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் ஐவார் பாணியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
பகிர்:

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதியில் திடீரென பெய்த மழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாக இருந்து நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீர்வரத்து திடீரென அதிகரித்து விநாடிக்கு 14,000 கன அடியாக தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments