முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக

விசிக தலைவா் திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவா் எங்களோடுதான் இருக்கிறாா். நல்லவா்களோடுதான் இருப்பாா்

Updated On : 17 நவம்பர் 2024, 8:44 pm IST
அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: விசிக தலைவா் திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவா் எங்களோடுதான் இருக்கிறாா். நல்லவா்களோடுதான் இருப்பாா் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலாளர் இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவா் இங்குதான் இருக்கிறாா். எங்களோடுதான் இருக்கிறாா் என்றார்.

தொடர்ந்து நான் அரசியல் பேச வரவில்லை. வழக்குரைஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்குரைஞர். அவர் எப்போதும் நம்மோடுதான் இருப்பாா். நல்லவா்களோடுதான் இருப்பாா் என அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என சூசகமாக அழைப்பு விடுக்கும் விதமாக பேசினார்.

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.