முகப்பு
தற்போதைய செய்திகள்

கருவுற்று இருப்பதை அறிவித்த சுந்தரி தொடர் நாயகி!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.

Updated On : 18 நவம்பர் 2024, 3:54 pm IST
பகிர்:

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அறியபட்டவர் நடிகை கேப்ரியல்லா.

தொடர்ந்து டிக் டாக்கில் விடியோவில் வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு, திரைத்துறையில் வாய்ப்புக் கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, காஞ்சனா - 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. இத்தொடரை அழகர்சாமி இயக்கி வருகிறார்.

சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரி தொடர் 2 பாகத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகை கேப்ரியல்லா தான் கருவுற்று இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு, அதன்மூலம் அறிவித்துள்ளார்.

கேப்ரியல்லாவுக்கு சைத்ரா ரெட்டி, ரச்சிதா மகாலட்சுமி, பிரனிகா உள்ளிட்ட சின்னத்திரை நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பியில் முன்னணியில் உள்ள சுந்தரி தொடர் முடிக்கப்படுவதற்கு, கேப்ரியல்லா கருவுற்று இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று இத்தொடரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments