முகப்பு
தற்போதைய செய்திகள்

இயந்திரத்தில் சிக்கிய கை... மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

Updated On : 19 நவம்பர், 2024 at 11:04 AM
பகிர்:

சின்னத்திரை நடிகை சாய் காயத்ரியின் கை இயந்திரத்தில் சிக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் மஞ்சு பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர் நடிகை சாய் காயத்ரி.

இதனைத் தொடர்ந்து சிவா மனுசுல சக்தி, ஈரமான ரோஜவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் கூட.

'நீ நான் காதல்' தொடரில் அனு பாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி, அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புக் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார்.

இதனிடையே, நடிப்பது மட்டும் இல்லாமல் தொழில் முனைவோராக இருக்கும் சாய் காயத்ரி, சாய் சீக்ரெட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாய் காயத்ரி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை, இயந்திரத்தில் சிக்கியது. இதனால் காயமடைந்த அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக, நடிகை சாய் காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. திருஷ்டி காரணமாக இது ஏற்பட்டது" என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று நடிகை சாய் காயத்ரியின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.