கோப்புப்படம் DIN
தற்போதைய செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

DIN

ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளதுபோல, வீட்டில் இருந்து ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண ஆவண விடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கன்னட மொழியில் மிகப் பெரிய வெற்றிப்பெற்ற பாஹீரா என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பார்க்கலாம்.

உதய் குமார் இயக்கத்தில் சார்லி பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ள லைன்மேன் திரைப்படம் நாளை(நவ. 22) ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

பவன் ராஜகோபாலன் இயக்கத்தில் நாசர், காவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விவேசினி திரைப்படம் ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

மலையாள திரைப்படமான வடக்கு தெற்கு திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் நாளை(நவ. 22) வெளியாகவுள்ளது.

நடிகர் ஆசிஃப் அலி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த கிஷ்கிந்தா காண்டம் படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’ | Cinema Updates | Dinamani Talkies

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

SCROLL FOR NEXT