FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி

தில்லி காற்று மாசு குறித்து ராகுல் காந்தி பதிவு.

Updated On : 22 நவம்பர் 2024, 4:26 pm IST
காற்று மாசுபாடு (கோப்புப்படம்)
பகிர்:

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

"வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலையாகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவானது எண்ணற்ற உயிர்களை அழிக்கிறது.

Advertisement

Advertisement

நம்மைச் சுற்றியுள்ள ஏழைகள் அனைவரும், அவர்களைச் சூழ்ந்துள்ள நச்சுக்காற்றில் இருந்து வெளிவர முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் தவிக்கின்றன, குழந்தைகள் நோய்வாய்படுகிறார்கள், மில்லியன் கணக்காண உயிரினங்கள் அழிந்து வருகின்றன. சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையால் நமது நாட்டுக்கான உலகளாவிய நற்பெயர் சிதைந்துள்ளது.

நூறு கிலோமீட்டருக்கு காற்று மாசு பரவியுள்ளது. காற்று மாசை சுத்தம் செய்வதற்கு முக்கிய மாற்றங்கள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அரசாங்கம், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து தேவைப்படுகிறது. இதை அரசியல் பழிசுமத்தும் விளையாட்டாக பார்க்காமல், நாம் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டியது அவசியம்.

இன்னும் சில நாள்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. நமக்கு ஏற்பட்டுள்ள கண் எரிச்சல், தொண்டை வலி பிரச்னைகள் குறித்து எம்.பி.க்களுக்கு நினைவூட்டப்படும். நாம் ஒன்றினைவது நமது பொறுப்பு, காற்று மாசு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அனைவருக்காகவும் ஆலோசிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments